மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையுத்தரவு, மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மன்னார் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. அதன்படி, சந்தேகநபர்கள் ஐந்து பேருக்குமான தடையுத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏழு காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காக மண் அகழும் காலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னார் தீவை அண்மித்த பகுதியில் புதிய காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்கான மண் பரிசோதனைக்குச் சென்றவர்களுக்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேசாலை காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த நபர்களுக்கு எதிராக முன்னர் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.