image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

Share

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையுத்தரவு, மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மன்னார் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. அதன்படி, சந்தேகநபர்கள் ஐந்து பேருக்குமான தடையுத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏழு காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காக மண் அகழும் காலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னார் தீவை அண்மித்த பகுதியில் புதிய காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்கான மண் பரிசோதனைக்குச் சென்றவர்களுக்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேசாலை காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த நபர்களுக்கு எதிராக முன்னர் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க...

292a7af3 f588c163 e7655f0e 0298d802 80f489e3 0508342b sarath weerasekera 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்” – சரத் வீரசேகர அச்சம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...