பாடசாலையை வணங்கி பிரியாவிடை செய்த மாணவர்கள்

tamilni 387

பாடசாலையை வணங்கி பிரியாவிடை செய்த மாணவர்கள்

நாவலப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் பாடசாலையின் முன்பாக விழுந்து பாடசாலையை பக்தியுடன் வணங்கியுள்ள செயற்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் எதிர்வரும் உயர்தர பரீட்சைக்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னரே இவ்வாறு பாடசாலையை வணங்கிச் சென்றுள்ளனர்.

குறித்த மாணவர்களின் செயலானது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version