மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கையர்கள் மீட்பு

tamilni 88

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கையர்கள் மீட்பு

மியான்மரில் இணைய மோசடி முகாமில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பதினைந்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மியன்மார்-தாய்லாந்து எல்லையில் இணையத்தள மோசடிகளுக்கான நிலையங்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த நபர்களை மீட்டெடுப்பது தொடர்பில் இலங்கையில் உள்ள பலரும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version