1 31
இலங்கைசெய்திகள்

நீதிமன்றிடம் அர்ச்சுனா எம்.பி முன்வைத்த கோரிக்கை

Share

நீதிமன்றிடம் அர்ச்சுனா எம்.பி முன்வைத்த கோரிக்கை

தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(ramanathan archchuna), தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம்,சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இந்த மனு இன்று(15) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம். கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனது கட்சிக்காரருக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.

இருப்பினும், அமர்வு முறையாக அமைக்கப்படாததால், மறுநாள் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி சட்டத்தரணியிடம் தெரிவித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அரச வைத்தியராக பணியாற்றிக்கொண்டே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாகவும், அதன்படி, அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டு இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார்

அதன்படி, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...