கட்சி பேதங்கள் பிரிவினைகள் இன்றி செயற்படுங்கள்! வேலணை பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3

யாழ். மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் வினைத்திறன் மிக்க வளமான சபையாக வேலணை பிரதேச சபையை மாற்றியமைக்க அமைந்துள்ள ஆட்சி அதிகார காலத்தை பயன்படுத்திக் கொள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்கள் பிரிவினைகள் இன்றி உழைக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் புதிய அமர்வு தவிசாளர் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.

முன்பதாக வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் மக்கள் பிரதிநிதிகள் வங்களாவடி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளை தொடர்ந்து பிரதேச சபையின் உத்தியோகத்தர்களால் உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு சபைக்கு அழைத்து வரப்பட்டனர்.

வேலணை பிரதேச சபையின் செயலளர் பிரசன்னத்துடன் ஆரம்பமான முதலாவது சபை அமர்வில் உரையாற்றிய தவிசாளர்,

“எமது வேலணை பிரதேச சபையானது மிகப் பின்தங்கிய ஒரு சபையாக இருக்கின்றது.

அந்த நிலை இனியும் தொடரக் கூடாது என்பதே எமது அனைவரது நிலையாக இருக்கின்றது. அதனடிப்படையில் எமது சபையை வருமானம் கூடிய சபையாக வினைத்திறன் மிக்கதாக பரிணமிக்கச் செய்வது அவசியமாகும்.

அதேபோன்று கடந்த சபையில் நாட்டின் காலத்தில் காலச் சூழலால் பொருளாதார நெருக்கடி போன்ற ஏதுக்களால் பல திட்டங்கள் தடைப்படுப் போயின.

அதனடிப்படையில் கடந்த காலத்தில் முன்னெடுக்காது இருந்த திட்டங்களை நாம் கட்சி பேதங்கள் இன்றி முன்னெடுப்பது அவசியம்” என கூறியள்ளார்.

Exit mobile version