25 683e9d77f0492
இலங்கைசெய்திகள்

ஆனையிறவு உப்பின் பெயரை மாற்ற ஒப்புக்கொண்ட அரசாங்கம்!

Share

யாழ்ப்பாணம் – ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, “ஆனையிறவு உப்பு என மறுபெயரிடப்பட்டு, உள்ளூர் சந்தை வழங்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

முன்னதாக ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு ”ரஜ லுனு” என்று அழைக்கப்பட்டது.

இந்த நாட்டில் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

சில பிரச்சினைகள் காரணமாக நாட்டின் தமிழ் மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...