வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் பணம்

rtjy 269

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் பணம்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

75 வீதத்தால் இந்த பணம் அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாடு என்ற ரீதியில் இந்த அபிவிருத்தி மிகவும் முக்கியமான விடயம். நாட்டின் மீதான அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் இதனை கூறலாம்.

முன்னர் வெளிநாடுகளில் வாழும் மக்கள் வெளிநாட்டுப் பணத்தை அனுப்பாமல் தமது குடும்ப உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வர முயற்சித்தனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version