24 66403bea637a7
இலங்கைசெய்திகள்

செயற்கை நுண்ணறிவிற்கும் புத்தரின் போதனைகளுக்குமான தொடர்பு

Share

செயற்கை நுண்ணறிவிற்கும் புத்தரின் போதனைகளுக்குமான தொடர்பு

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையிலான தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பௌத்த மன்ற மண்டபத்தில் நேற்று (11.05.2024) நடைபெற்ற இலங்கை பௌத்த சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945இல் அணுகுண்டு வெடித்தபோது இனி தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்காது என்று கருதப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று செயற்கை நுண்ணறிவு வரை சென்றுள்ளோம்.

அடுத்த இரண்டு தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவு எங்கே செல்லும் என்ற கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம்.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவுக்கும் புத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம் மனதால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே புத்தரின் போதனைகள் சுட்டிக்காட்டுகிறது. மனதைக் கட்டுப்படுத்தினால் முன்னேறலாம். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை.

மனதைக் கட்டுப்படுத்துவது மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் புத்தரின் போதனைகள் மனித குலத்திற்காக போதிக்கப்பட்டள்ளது.

இந்த மனித மனதிற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தற்போது வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தகவல்களை இணைக்க முடியும்.ஆகவே, புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பை நாம் ஆராய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு வேறு மதத்தைப் போதிக்குமானால் அது பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, நாம் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், மக்கள் தங்கள் கையில் இருக்கும் கைபேசியுடன் தர்மத்தை இணைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். இது பௌத்தம் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறியுள்ளது.

எனவே, செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தவும் புதிய சட்டவிதிகளை நாம் கொண்டு வருகிறோம். தொழில்நுட்ப மேம்பாட்டு சட்ட வரைவை தொழில்நுட்ப அமைச்சு தயாரித்துள்ளதுடன், அதன் கீழ் செயற்கை நுண்ணறிவு மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தரின் போதனைக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சியைத் தொடங்க அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
arrest 1200px 28 08 2024 1000x600 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூ. 8 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம்: 69 போத்தல்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து,...

bb70ef27 25f3 4d2d aac2
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் கடத்தல்: ஈரானுக்கு உதவிய வெனிசுலா கப்பல் நிறுவனம், 6 கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய தடை!

கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்திச் செல்ல உதவியதாக வெனிசுலா மீது குற்றம்...

National Strategy child sexual abuse
உலகம்செய்திகள்

இலங்கைப் பிரஜை மீதான சிறுமி கடத்தல், துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்: மேற்கு லண்டன் நீதிமன்றில் மறுப்பு!

மேற்கு லண்டனில் உள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20...

articles2FxGu0xvsmkR7xnWvm5gj0
செய்திகள்விளையாட்டு

மறுநாள் ஜோன் சினாவின் கடைசி WWE போட்டி: குந்தரை எதிர்கொள்கிறார் ஜாம்பவான்!

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது புகழ்பெற்ற இரண்டு...