வெற்றிபெற்றால் சலுகைகளை ஏற்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ள வேட்பாளர்

4 25

வெற்றிபெற்றால் சலுகைகளை ஏற்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ள வேட்பாளர்

தாம் நாடாளுமன்றத்தில் தேர்தலில் வென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வழமையான சலுகைகளை பெறப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் ரெஹான் ஜயவிக்ரம உறுதியளித்துள்ளார்.

மொரவக்க மற்றும் தெனியாயவில் நடைபெற்ற கூட்டங்களின் போது, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அல்லது வாகன அனுமதிப்பத்திரத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசியலில் புதிய முகங்களின் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், தனிப்பட்ட நன்மைகளைப் பெறாமல் மக்களுக்கு சேவை செய்வதில் தாம் உண்மையாக இருப்பதாகவும் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

Exit mobile version