27 3
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்கள் : வெளியான தகவல்

Share

நாட்டில் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்கள் : வெளியான தகவல்

நாட்டில் 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் புதிய தனியார் நிறுவனங்கள் தமது பதிவுகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது நிறுவன பதிவாளர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 12,651 புதிய வணிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10,520 புதிய நிறுவனங்களும் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 1,899 புதிய நிறுவனங்களும் பதிவு இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் தொழில்முனைவோர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...