25 6938269b096e7 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் – தேசிய மக்கள் சக்தியிடம் வலிகாமம் தென்மேற்கு தவிசாளர் கோரிக்கை!

Share

அப்பாவி மக்களைத் தூண்டி, அவர்களின் சிந்தனையை மாற்றி, அனர்த்தத்தில் அரசியல் செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுப்பதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 9) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் 5ஆம் திகதி, கல்லுண்டாய் குடியிருப்புப் பகுதி மக்கள், குறித்த பகுதிக்குத் தண்ணீர் கொடுக்கச் சென்ற வாகனத்தை இடைமறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரதேச சபை நீண்ட காலமாக முழுமையாகத் தண்ணீர் வழங்குவதில்லை என அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்தக் குடியிருப்பு, 2019ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் குடியிருப்புக்கான தண்ணீர் சேவையை பிரதேச செயலகமே வழங்கி வந்தது.

பிரதேச செயலகம் அதனைத் தொடர்ச்சியாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதனால் எம்மிடம் (பிரதேச சபையிடம்) கேட்டதற்கமைய ஐந்து வருடங்களாக இந்தச் சேவையைத் தாமே செய்வதாகத் தவிசாளர் குறிப்பிட்டார்.

பிரதேச சபை தனது கடமையைச் சரியாகச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட தவிசாளர், நீர்த் தட்டுப்பாடு குறித்த போராட்டத்துக்குப் பதிலளித்துப் பின்வருமாறு விளக்கினார்:

“தண்ணீர் இல்லாமல் அந்தக் குடியிருப்பில் யாரும் மரணித்ததாகவோ ஏதும் நடந்ததாகவோ இதுவரை எந்தத் தகவலும் பதிவில் இல்லை.”

பிரதேச சபையின் வளங்களைப் பொறுத்தவரையில் சில தடங்கலும் இடையூறுகளும் ஏற்படும் நேரங்களில் தண்ணீர் போகின்ற நேரங்கள் தவறினாலும், அந்தத் தண்ணீர் ஏதோவொரு விதத்தில் சென்றடையும்.

கல்லுண்டாயில் மழை அதிகம் பெய்யும் நேரத்தில் பெரிய பவுசர்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அது புதைந்துவிடும். பிறகு அதனை வெளியில் கொண்டுவர முடியாது.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...