மின்சார கட்டணத்தை 50 வீதத்தினால் குறைக்க திட்டம்

tamilnih 25

இந்த மாத இறுதியில் மின்சாரக் கட்டணத்தை 50 வீதத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் மின்சாரக் கட்டணம் 18 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் தொகையை 50 வீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளர்.

மேலும் நாட்டில் தற்பொழுது நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version