23 653cea60e08ea
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் அரிசியின் விலை

Share

அதிகரிக்கும் அரிசியின் விலை

அதிகரிக்கும் அரிசியின் விலைசமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக வர்த்தக அமைச்சு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்நிலையில், விலைக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அரிசிக்கு நாம் வழங்கிய கட்டுப்பாட்டு விலையை விட அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி வியாபாரிகளும் செயற்படுகின்றனர்.

இதை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று தலைமை தாங்கி நானும், பணிப்பாளர்களும் கண்டிப்பாக சுற்றிவளைப்புக்களை நடத்துவோம்.

அப்படியும், அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாது போனால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவித்துள்ளேன்.” நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அரிசியின் விலை தொடர்பில் கருத்து வெளியிட்ட அரிசி வியாபார சங்க தலைவர் டட்லி சிறிசேன, அரிசியை மறைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...