24 6636b10eb8cc2
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் ஆணொருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்பு

Share

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் ஆணொருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்பு

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலையதின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்றைய தினம் (04.05.2024) மீட்கப்பட்டுள்ளது.

சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள ஆற்றில் நேற்று (04) மதியம் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் கூடுகள் சிக்கியதையடுத்து அதனை கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் தடவியல் பிரிவினர் விசாரணையில் 40 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவரின் மண்டை ஒடு என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி சம்பவ இடத்துக்கு சென்று மண்டை ஓட்டை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீட்கப்பட்ட மண்டை ஓடு கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி காணாமல் போயுள்ள மனநலம் குன்றிய 28 வயதுடைய இளைஞனான பழைய பனிச்சையடியைச் சேர்ந்த செல்வராசா நிதுஷன் என்பவரது மண்டை ஓடு என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை மீட்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புகள் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...