எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் (Mannar) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன், ஸ்வர்ணபுரி கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கிருந்த பாழடைந்த வீடொன்றில் இருந்து 1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட 28 பார்சல்கள், படுக்கை விரிப்புகள் (பெட்சீட்) 1400 கொண்ட 14 பார்சல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு பங்கிடுவதற்காக இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.