பொருட்களை வாங்கும் போது பொலித்தீன் பைகளுக்குப் பணம் அறவிடும் முடிவு குறித்துக் கவனம் செலுத்தி, அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு ஒரு முக்கியமான பரிந்துரை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

