tamilnid 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம் இவர்களே

Share

தென்னிலங்கையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம் இவர்களே

அண்மையில் இடம்பெற்ற  துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இராணுவத்திலிருந்து வெளியேறிய, இளைப்பாறியவர்களே பெரும்பாலும் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம். இராணுவத்திலிருந்து பெரும்பான்மையானோரை வெளியில் அனுப்பும் போது அதற்குரிய சர்வதேச ரீதியான நடவடிக்ககைகளை எடுக்குமாறு ஏற்கனவே நான் அரசாங்கத்திற்கு கூறியிருந்தேன்.

இராணுவ வாழ்க்கையிலிருந்து பொது வாழ்க்கைக்கு மாறஅவர்கள் செய்ய வேண்டிய நடைமுறைகள் சர்வதேச ரீதியாக கூறப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் இது தொடர்பான சட்டத்திட்டங்கள் காணப்படுகின்றது. அதே வேளை இராணுவத்திலிருந்து சிலர் துப்பாக்கிகளுடன் கள்ளத்தனமாக வெளியேறியுள்ளனர்.

சிலவேளைகளில் இராணுவத்தினரிடமிருந்து துப்பாக்கிகளை பணத்திற்கு வாங்கியும் வைத்துள்ளனர். எனவே இராணுவத்தினர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...