” ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனை பெறவேண்டிய தேவை ஏற்படின், அதனை நாம் பெறுவோம். அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.” – என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ரணில் விக்கிரமசிங்கதான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். எனினும், அரசியலில் ‘கேம்’ விளையாடுவதற்கு நான் தயார் இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு 72 வயதாகின்றது. அரசியலில் சிறந்த அனுபவம் உள்ளது. பொருளாதாரம் பற்றியும் சிறந்த தெளிவு உள்ளது. எனவே, தேவையேற்படின் அவரிடம் ஆலோசனை பெறமுடியும். எம்மிடையே அரசியல் ரீதியிலான பிரச்சினைதான் உள்ளது. மாறாக தனிப்பட்ட பிரச்சினை கிடையாது.” – என்றார்.
#SriLankaNews