இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மீனினம்

24 664c1bf29368a

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மீனினம்

கொழும்பின் புறநகர் பகுதியில் கல்கிஸ்சை கடற்கரையில் கல்குல்லா அல்லது ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் அரிய வகை மீனின் இறந்த உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த விலங்கு இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கிறது மற்றும் தரைக்கு வராத இனமாகும்.

அரியவகையாக காணப்படும் இவை மற்ற மீன்களின் உடல் நிறத்தில் இருந்து வேறுபட்ட தோல் புள்ளிகள் காணப்படும்.

அவை உணவுக்காக எடுத்துக் கொள்ளப்படாத மீன் வகை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழ்கடலில் உள்ள பாறைகளைச் சுற்றி மீனவர்கள் வீசிய வலைகளில் சிக்கியிருக்கலாம் அல்லது போர்க்கப்பல்களிருந்து வெளியேறும் திரவம் தேங்கி நிலத்திற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Exit mobile version