அடுத்த ஜனாதிபதி ரணிலே : மனுஷ நாணயக்கார உறுதி

24 66011003e8df6

அடுத்த ஜனாதிபதி ரணிலே : மனுஷ நாணயக்கார உறுதி

இலங்கையில் தற்போது இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களில் சகல மக்களினதும் மனதை வென்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விளங்குவதோடு அவர்தான் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் காலம் நெருங்கும் வேளையில் சிலர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றார்கள்.அவர்கள் என்ன நோக்கத்துக்காக அப்படிச் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி நடை போடும். எமது கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார்.

ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பு வேட்பாளர் இல்லாமல் பொது வேட்பாளராகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் உண்டு.

அவர் எந்த வழியில் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே பெருமை. எமது கட்சிக்கு நாள்தோறும் மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது.

அதேவேளை, ஜனாதிபதிக்கு மூவின மக்களின் ஆதரவும் பெருகி வருகின்றது” என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version