tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

நெருக்கடி நிலைமையில் நாடு! எதிரணிக்கு ரணில் மீண்டும் அழைப்பு

Share

நெருக்கடி நிலைமையில் நாடு! எதிரணிக்கு ரணில் மீண்டும் அழைப்பு

எமது நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது. நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களில் அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நான் சரியென்று இரண்டு பக்கங்களில் (ஆளும், எதிரணி) உள்ளவர்களும் கூறுகின்றனர்.

அப்படியென்றால் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும் ஒன்றாக இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

ஏன் எங்களுக்கு இணைந்து செயற்பட முடியாது? அத்துடன், நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது.

இந்த நேரத்தில் இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்தே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் ஒரே அச்சுறுத்தலே உள்ளது.

அதில் இருந்து மீள்வதற்கு வேறு வேலைத்திட்டங்கள் இருக்குமாக இருந்தால் அதனைக் கூறுங்கள்.

ஆனால், யாரும் வேலைத்திட்டங்களை முன்வைக்கவில்லை. தற்போதைய கொள்கைத் திட்டங்களை இரண்டு தரப்பிலும் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதால் இரண்டு தரப்பினரும் ஒன்றாக வேலை செய்து நாட்டுக்குக் காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...