ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வந்தவர்களை தடுத்த ரணில்
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பான நகர்வை, கட்சியின் தலைவர் சிறிது காலத்துக்கு தாமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உறுப்பினர்கள் கடந்த மே தினத்தன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஏற, ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
எனினும் அதனை தடுத்து நிறுத்திய ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கட்சிகளின் பொது வேட்பாளராக தன்னை அறிவித்த பின்னரே அத்தகைய நகர்வு இடம்பெறவேண்டும் என்று கூறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறுவோருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்ற அச்சம் காரணமாவே கட்சி தாவல் மேற்கொள்வோரின் சரியான எண்ணிக்கை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினத்தில் பங்கேற்காத ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள போன்றோரே ரணிலுடன் இணையவுள்ளதாக பேச்சுக்கள் உலாவுகின்றமை குறிப்பிடத்தக்கது.