24 2
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களை கையாள குழு ஒன்றை அமைத்த ரணில்

Share

சமூக ஊடகங்களை கையாள குழு ஒன்றை அமைத்த ரணில்

பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) நியமித்துள்ளதாக கொழும்பின் (Colombo) ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களையும் கவனிக்கும் உச்ச அமைப்பாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardene) தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்சவும் (Basil Rajapaksha) இந்தக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், அவர் குழுவில் பணியாற்ற மறுத்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...