16 5
இலங்கைசெய்திகள்

அப்பாவி மக்களை குறிவைக்கும் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு

Share

அப்பாவி மக்களை குறிவைக்கும் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு

இலங்கையின் விரிவான உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு இயந்திரம் அப்பாவி மக்களை குறிவைப்பதற்காக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

விமர்சனங்களில் ஈடுபடுபவர்களை மௌனமாக்குவதற்காகவும் சிறுபான்மை சமூகங்களை இழிவுபடுத்துவதற்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை பயன்படுத்துகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.

2022 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு ஆற்றிய உரையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உறுதிமொழி வழங்கினார்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது

இலங்கை அதிகாரிகள் தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளிற்கு உரிய ஆதாரங்களை முன்வைக்காத போதிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் மற்றும் சித்திரவதைகள் காரணமாக சிலர் பலவருடகாலமாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சிலர் வழக்குகள் கைவிடப்பட்ட பின்னரும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் பரந்துபட்ட அளவில் பயன்படுத்தப்படுவதால் சிவில்சமூகம் அரசாங்கமட்டத்திலான ஊழல் குறித்து ஆராய முடியாத நிலையில் காணப்படுவதாக 2023 செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் ஏற்படும் அச்சநிலை அவ்வாறானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு சகாக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

Share

Recent Posts

தொடர்புடையது
1748968110 WhatsApp Image 2025 06 03 at 8.24.23 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பகமான கல்விப் பங்காளியாகத் தொடர்வோம்: அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதி!

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், கல்வி...

image 28f29109e8
அரசியல்இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி: ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

நவம்பர் மாதக் கடைசியில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட...

15786408 national 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெலிவேரிய விடுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஐஸ் போதைப் பொருள் கொடுத்து 21 வயதுப் பெண்ணுக்குத் துன்புறுத்தல்!

வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருள் (Ice...