24 6620af06a406e
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே பீதி

Share

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே பீதி

“அதிபர் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதம் அளவில் அதிபர் தேர்தல் நடைபெற்று புதிய அதிபர் பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கையின் தேர்தல் ஆணை குழுவும் புதிய தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறி வருகின்றது.

இது இப்படி இருக்க அரசியல்வாதிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.

கடந்த காலங்களிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு தள்ளிவைத்திருக்கின்றது. மாகாண சபை தேர்தலில் புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டு வருகின்றோம் என்று காரணம் கூறப்பட்டு காலவரையறையின்றி அந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பன அரசின் ஏஜன்டுகள் அல்லது அரசால் நியமிகப்பட்டவர்கள் எனப்படுவோரின் அதிகாரத்தின் கீழ் காணப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத்திலிருந்து மாகாண சபை மற்றும் நாடாளுமன்றம் வரையும் அரசின் செல்வாக்கு மேலோங்கி காணப்படுகின்றது. அரசு தான் நினைத்த விடயங்களைச் செய்கின்ற சூழ்நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கின்றது. எதிர்க்கட்சியோ அல்லது மக்களின் ஜனநாயக உரிமைகளோ மதிக்கப்படவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் உருவாக்கப்படவில்லை. அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆயினும், அந்த தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, இன்னுமோர் அரகலய போராட்டம் தேவையா? அல்லது நாடு முழுவதும் மக்கள் எழுச்சியொன்று ஏற்பட வேண்டுமா? போன்ற கேள்விகளும் எழுந்து நிற்கின்றன.

அரசின் இவ்வாறான போக்குகள் மீண்டும் பாரிய எழுச்சியொன்றுக்கு வழிவகுக்கலாம். இவ்வாறான எழுச்சிகள் பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் என்பவை பின்தள்ளி போவதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தும்.

ஜனநாயகத்தை மதித்து மக்களின் வாக்குரிமைகளை மதித்து அதிபர் தேர்தல் குறிப்பிடப்படும் திகதியில் குறிப்பிடப்படும் காலத்தில் நடத்தப்பட வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர்.

தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைப்பதை விடுத்து மக்களை மதித்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...