ரணில் தொடர்பில் மகிந்தவின் முக்கிய தீர்மானம்

24 667f7cfe0ff26 27

ரணில் தொடர்பில் மகிந்தவின் முக்கிய தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை முன்வைக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். எதிர்கால பயணத்தை ரணிலுடன் செல்ல வேண்டும்.

கட்சி என்ற ரீதியில் வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பது சரியில்லை என மகிந்த குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் சக்தியாக பசில் ராஜபக்ச மட்டுமே இருப்பார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version