மகிந்த – ரணில் – பசில் அவசர சந்திப்பு

tamilni 135

மகிந்த – ரணில் – பசில் அவசர சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் எதிர்கால அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சிக்குள் நிலவும் பிரச்னைகள் குறித்தும், எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்தும் மேலும் ஆலோசிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்வேறு கட்சிகள் தமது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள நிலையில், பசில் ராஜபக்ஸ தரப்பினர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பாரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version