அநுரகுமாரவை பாராட்டும் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்

4 5

அநுரகுமாரவை பாராட்டும் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு வெள்ளவீதியிலுள்ள தேர்தல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே லான்சா இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எரிவாயு கொள்கலன் சின்னத்தில் பலமான வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தாம் வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த நிமல் லான்சா, சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள எதிர்க்கட்சியை உருவாக்க தங்களுக்கு உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version