அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

tamilnid 24

தேசிய இனப்பிரச்சினைகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பனவே நாடு எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க வேண்டுமாயின் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முன்நோக்கி நகர வேண்டுமாயின் வலுவான பொருளாதாரத்தைப் போன்றே இனங்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் என எந்த இனத்தைச் சேர்ந்தாலும் அவர்கள் அனைவரும் இலங்கையர்களே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version