tamilni 8 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

விமலின் கருத்துக்கு ரணில் பதிலடி

Share

விமலின் கருத்துக்கு ரணில் பதிலடி

ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிவது தொடர்பில் விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார் என அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்றும், ஏதேனும் சர்வதேச அமைப்பொன்றில் முக்கிய பதவியொன்றைப் பெற்று ஓய்வுகாலத்தைக் கழிக்கவே ரணில் விக்கிரமசிங்க முற்படுவார் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

விமலின் இந்தக் கருத்து தொடர்பில் நேற்று ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின்போது பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன்போதே ஜனாதிபதி மேற்படி பதிலை வழங்கினார் என்று அந்த அமைச்சர் கூறியுள்ளார்.

“நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பேன்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து தற்போது அவசரப்பட மாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிவது தொடர்பில் விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாது.

ஆளும் கட்சியிலிருந்து எதிரணிப் பக்கம் பாய்ந்தவர்களும், எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களும் எனது அரசியல் பயணத்தை ஏதோவொரு வழியில் முடக்க முயற்சிக்கின்றனர்.

அவர்களால் எனது அரசியல் பயணத்தை ஒருபோதும் முடக்க முடியாது. நீங்களும் அவர்களின் பொறிக்குள் சிக்கிவிடாதீர்கள்.

அரசியலில் நான் தொடர்ந்து இருப்பதா? இல்லையா? என நான்தான் முடிவு எடுப்பேன்.” என ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் குறிப்பிட்டார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...