சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்

1 15

சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளை – ஹப்புத்தளையில் நேற்று (08.09.2024) நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து அவர்,

“இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு பக்கமாக திரும்பி நின்றோம். இன்று அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்திருக்கிறது.

மலையக மக்கள் காணியின்றி தவித்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டதிட்டங்களை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.

அதனால் மலையக மக்களுக்கு வீட்டுரிமையும் காணியுரிமையும் கிடைக்கப்போகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த பொருளாதார நெருக்கடியால் சகல மக்களும் கஷ்டப்பட்டனர். இன்று 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே கல்விப் புலமையும், வலுவான சர்வதேச தொடர்புகளும் உள்ளது.

அதேபோல் நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு அசுர பலம் கிடைத்திருக்கிறது.

எனவே, மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இன்று 38 பேருக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை வந்திருக்கிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தபோது அவர்களுக்கு அந்த ஆசை ஏன் வரவில்லை” என்றார்.

Exit mobile version