18 9
இலங்கைசெய்திகள்

சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்

Share

சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளை – ஹப்புத்தளையில் நேற்று (08.09.2024) நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து அவர்,

“இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு பக்கமாக திரும்பி நின்றோம். இன்று அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்திருக்கிறது.

மலையக மக்கள் காணியின்றி தவித்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டதிட்டங்களை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.

அதனால் மலையக மக்களுக்கு வீட்டுரிமையும் காணியுரிமையும் கிடைக்கப்போகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த பொருளாதார நெருக்கடியால் சகல மக்களும் கஷ்டப்பட்டனர். இன்று 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே கல்விப் புலமையும், வலுவான சர்வதேச தொடர்புகளும் உள்ளது.

அதேபோல் நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு அசுர பலம் கிடைத்திருக்கிறது.

எனவே, மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இன்று 38 பேருக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை வந்திருக்கிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தபோது அவர்களுக்கு அந்த ஆசை ஏன் வரவில்லை” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...

1706773265 AL exam paper marking l
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவில் ஆரம்பம்: பரீட்சை முடிவதற்கு முன்னரே திட்டமிடல் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை...