ரணிலின் தேர்தல் பரப்புரை பதாதைகளை உடைத்த மர்ம நபர்கள்

18

ரணிலின் தேர்தல் பரப்புரை பதாதைகளை உடைத்த மர்ம நபர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தம்புள்ளை தொகுதியின் செயற்பாட்டு அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பதாகைகளை சிலர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை மாநகரசபையின் முன்னாள் தவிசாளர் மாயா பதெனியவின் வீட்டில் இந்த அலுவலகம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகளே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version