5 3 scaled
இலங்கைசெய்திகள்

பசிலின் கோட்டையைக் கைப்பற்றிய ரணில்

Share

பசிலின் கோட்டையைக் கைப்பற்றிய ரணில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார்.

மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது மொட்டுக் கட்சி பக்கம் நிற்கின்றனர்.

2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 65.76 சதவீத வாக்குகளுடன் 13 ஆசனங்களை மொட்டுக் கட்சி கைப்பற்றியது.

மேற்படி 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்பஹா மாவட்ட தலைவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்க வேண்டும் எனவும் அறிவித்து வருகின்றனர். அதேபோல் மொட்டுக் கட்சி பட்டியலில் கம்பஹா மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் செயற்பட்டு வருகின்றார்.

அவர் தற்போது சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன, உபுல் மகேந்திர ராஜபக்ச, பிரதிப் விதான, மிலான் ஜயதிலக்க ஆகியோரே மொட்டு கட்சி பக்கம் நிற்கின்றனர்.

எனினும், நாமல் ராஜபக்ச தலைமையில் திவுலபிட்டிய ஆசனத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரமே பங்கேற்றுள்ளார். கம்பஹா மாவட்டம் என்பது பசில் ராஜபக்சவின் அரசியல் கோட்டையாகவும் விளங்குகின்றது.

அந்த மாவட்டத்தில் போட்டியிட்டே அவர் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேவேளை, பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மொட்டுக் கட்சி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

இந்தச் சந்திப்பின் பின்னர் தீர்க்கமான சில அரசியல் முடிவுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன . தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும் என்று ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் பசில் ராஜபக்சவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Share
தொடர்புடையது
images 11
செய்திகள்இந்தியா

20 இலட்சம் புத்தகங்களின் சேகரிப்பாளர்: பத்மஸ்ரீ அன்கே கவுடாவின் அரிய சாதனை!

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த 79 வயதான அன்கே கவுடா (Anke...

26 698472524cf78
செய்திகள்உலகம்

பிரான்ஸில் சீன உளவாளிகள் கைது: Airbnb வீட்டின் தோட்டத்தில் செயற்கைக்கோள் கருவி மூலம் ரகசியத் தகவல் சேகரிப்பு!

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வீடு ஒன்றிலிருந்து தகவல்களைத் திரட்டியதாகக் சந்தேகிக்கப்படும் சீன உளவாளிகள்...

trump wh af1 feb 6 1770433049681 hpMain
செய்திகள்உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் அமெரிக்காவில் கூடுதல் வரி: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

ஈரானிய அரசாங்கத்தின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், அந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட...

26019077 tn13
செய்திகள்இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு பலம்: 3,000 கி.மீ தூரம் பாயும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

இந்தியா தனது அணு ஆயுத பலத்தை நிரூபிக்கும் வகையில், தரை விட்டு தரை பாயும் அக்னி-3...