சஜித்தை தொலைபேசியில் அழைத்த ரணில்!

Untitled 1 61

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை 01 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமது கட்சி ஆதரவளிக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, 29 ஆம் திகதி பொது நிதிக் குழுவுக்குப் பரிந்துரைத்து,
சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் தம்முடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் தொலைபேசியில் உரையாடினார் என்று குறிப்பிட்ட ஹர்ஷ டி சில்வா, அந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.

Exit mobile version