மகிந்த – ரணில் இரகசிய சந்திப்பு: நாமல் எதிர்ப்பு

rtjy 209

மகிந்த – ரணில் இரகசிய சந்திப்பு: நாமல் எதிர்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மொட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவும் அண்மையில் இரகசியமாகச் சந்தித்து உரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பு- சங்கிரில்லா உணவகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் இளைய மகன் அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகின்றது. ஆனால், மகிந்தவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச இதற்கு எதிர்ப்பு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபைக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ராஜபக்ச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான எம்.பி. ஒருவரே ரணிலும் மகிந்தவும் இரகசியமாகச் சந்தித்து உரையாடிய தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் என தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version