நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து இன்று (14) பிற்பகல் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் கொத்மலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
இதேவேளை, கொத்மலை, இறம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.