rtjy 94 scaled
இலங்கைசெய்திகள்

இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி

Share

இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி

மோடியின் மத எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி ராஜபக்சக்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தனர் என மக்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஹெஸான் மாலக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாம் மிகவும் தெளிவாக கூறுகின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் போன்றவர்களுடன் ராஜபக்சக்கள் பழகினார்.

அவ்வாறு இல்லையென்றால் சிவசேனா இயக்கத்தை ஆரம்பித்த சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் ராஜபக்சக்களின் நெருக்கமானவர்களாக காணப்படுகின்றனர்.

பிஜேபி அல்லது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நடைமுறைகளையே பின்பற்றினர்.

அஜித் தோவாலின் ஆலோசனைக்கு அமையவே இந்தியாவில் முஸ்லிம் விரோத கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் ஊடாகவே மோடி தனது ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டார்.

உலாமா தாக்குதலுக்கு புண்ணியம் சேரவே மோடி 2019 ஆம் ஆண்டு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டார்.

எனவே ராஜபக்சகளின் அண்ணாவாக மோடியின் அனுபவங்களையே இவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இலங்கையில் இரத்தத்தின் மத்தியில் ஆட்சி நடத்தும் அணுகு முறையை மோடியிடமிருந்து ராஜபக்சக்கள் கற்றுக் கொண்டனர்.

செனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் நாட்டின் தற்போதைய புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சாலேவின் பெயர் சர்ச்சைக்குரிய விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச சுரேஷ் சாலேவை மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தி இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியாக கடமையாற்றிய அவரை நாட்டின் புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியாக நியமித்தார்.

இலங்கையில் முதல் தடவையாக பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் பதவி ஒன்று இராணுவ அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நிலந்த ஜெயவர்த்தன பொலிஸின் இரண்டாம் நிலை தலைவராகவும், தேசபந்து போன்றவர்கள் அதிகாரபூர்வமற்ற பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வருகின்றார்.

எனவே இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் திருப்தி அடைய முடியாது.

நாம் ரணில் விக்ரமசிங்வை வலியுறுத்துகின்றோம். அவருக்கு சவால் விடுக்கின்றோம். இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படும் வரையில் சுரேஷ் சாலேவை பணியிடை நீக்கம் செய்யுமாறு கோருகின்றோம்.

சுரேஷ் சாலேவிற்க்கு இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டுமாயின் உடனடியாக தற்காலிக அடிப்படையில் பதவியில் இருந்து அவர் விலகிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் இந்த விசாரணைகள் தொடர்பில் எமக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருப்தி அடைய முடியாது. நம்பிக்கை கொள்ள முடியாது.

போலியான போராட்டம் நடத்திய, நாமல் குமாரவின் நாடகங்கள், தர்கா நகர் சம்பவத்தை மேற்கண்ட, திகன சம்பவங்களை மேற்கொண்ட, பொரளை தேவாலயத்தில் குண்டு வைத்தமை உள்ளிட்ட நாடகங்களை மேற்கொண்ட கும்பல் யார் என்பது இந்த நாட்டின் அனைவருக்கும் தெரியும்.

இந்த அனைத்து விடயங்களையும் ஒரு தரப்பினர் மேற்கொள்ள உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை மட்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டார்கள் என நம்பும் அளவிற்கு நாம் அடி முட்டாள்கள் கிடையாது என்பதை நாம் இந்த இடத்தில் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...