vava scaled
இலங்கைசெய்திகள்

ஒன்றாகத் தோன்றிய பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் !

Share

ஒன்றாகத் தோன்றிய பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் !

கோட்டாபயவால் பிளவுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பில் ஒரு நிகழ்வில் ஒன்றாக தோன்றியுள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தவர்கள் அனைவரையும் மிக நீண்ட காலத்துக்கு பின்,கொழும்பில் நடைபெற்ற இராஜாங்க அமைச்சர் டி.பி. சாணக்கவின் திருமணத்தில் ஒரே இடத்தில் ஒன்றாக காணும் வாய்ப்பு பலருக்கு கிடைத்துள்ளது.

ஜனாதிபதி, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரும் அந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியாக ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டதாகவும் இதை கண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரை தேடித் சென்று அவருடன் உரையாடியதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் நாமல் ராஜபக்ச அவரது மனைவி – பிள்ளையுடன் வருகை தந்ததாகவும் அவரது மனைவி கர்ப்பிணியாக இருப்பதை கண்டவர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...