சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு
இலங்கையில் சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து மூலம் பொதிகள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்வதற்கான கட்டணங்கள் 80 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட உள்ளது.
பொதியொன்றுக்காக இதுவரையில் அறவீடு செய்யப்பட்ட குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
பொதியின் பெறுமதியின் அடிப்படையில் புதிய கட்டண அறவீட்டுமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுவரை காலமும் பொதியின் எடையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் பயண தூரத்தின் அடிப்படையில் கட்டண அறவீடு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்பி வைக்கப்படும் பொருட்களின் பெறுமதியின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.