சீரற்ற காலநிலை அனர்த்தங்கள் காரணமாகச் சேதமடைந்த தொடருந்துப் பாதைகளைப் புனரமைக்க சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்துத் தொடருந்துப் பாதைகளின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்குச் சிறிது காலம் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சுகாதாரத் துறை குறித்த விபரங்கள் பாதிக்கப்பட்ட 236 சுகாதார நிறுவனங்களில் சுமார் 90 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பதுளை – ஸ்பிரிங்வெலி மற்றும் கந்தேகெதர மருத்துவமனைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மஹியங்கனை மற்றும் சிலாபம் மருத்துவமனைகள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. எனினும், அனர்த்தங்கள் காரணமாக மருத்துவமனைகளில் உள்ள சி.டி ஸ்கேனர்கள் (CT Scanners) போன்ற பல பெறுமதியான உபகரணங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.