இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி

24 6683bf9aa3fa3

இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி

மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் (R. Sampanthan) பூதவுடலுக்கு அரசியல் தலைவர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இரா சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அன்னாரது பூதவுடலுக்கு புதன்கிழமை (03) நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மேலும், இரா.சம்பந்தனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடாத்தப்படவுள்ளன.

Exit mobile version