நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி

28

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை விட்டு விலகிய பின்னரும் பயன்படுத்துவதற்காக இரண்டு ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்கும் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை, கேள்விகளை எழுப்பியுள்ளது

இந்த ஆயுதங்களை வேறு யாராலும் மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது என்ற சிக்கலான நிபந்தனை காரணமாக, இந்த ஆயுதங்களின் விவகாரம் என்ன நோக்கத்திற்கு உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்களை வைத்திருக்கும் உரிமை உண்டு.

இதற்கு மேலதிகமாகவே ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில் துப்பாக்கிகளின் கொள்வனவுக்காக இதுவரை ஏழு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆயுதங்களின் பயன்பாடு குறித்த முரண்பாடான சூழ்நிலையை ஏற்படுத்தும். அத்துடன் இந்த ஆயுதங்கள் தவறான கைகளுக்குச் செல்லக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, பிரிவினைவாதப் போரின் போது, பாதாள உலகத்திற்கு தானியங்கி ஆயுதங்கள் கிடைத்தபோது, அந்த ஆயுதங்களை மீட்பது முடியாத காரியமாக மாறியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version