23 653c992c3b866
இலங்கைசெய்திகள்

நண்பியின் திருமணத்தில் கலந்து கொண்ட யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

Share

நண்பியின் திருமணத்தில் கலந்து கொண்ட யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

புத்தளத்தில் 20 வயதான இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (27.10.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய குறித்த யுவதி தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார்.

 

திருமண நிகழ்வில் முழுமையாக கலந்து கொண்ட யுவதி, திருமண விருந்தை சாப்பிட்டதன் பின் தனது உடல்நிலை சரியில்லை எனவும், உடனடியாக தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் நண்பியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

 

திடீரென சுகயீனமடைந்த யுவதி

இவ்வாறு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும் போது குறித்த யுவதி திடீரென சுகயீனமடைந்ததுடன், அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் சில உடல் அவையங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...