உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் வாங்குவதற்கு லங்கா சதோச மற்றும் நாட்டின் இரண்டு பிரபலமான வணிகக் குழுக்களான கார்கில்ஸ் மற்றும் கீல்ஸ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்த நிறுவனங்கள் ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ.210க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூ.130க்கும், ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தை ரூ.225க்கும் வாங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
விவசாயிகளிடமிருந்து இந்தப் பொருட்களைக் கொள்முதல் செய்வது இன்று (02) முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிறுவனங்களுக்கு ஒரு விவசாயி 2,000 கிலோகிராம் வரை வழங்க முடியும் என்றும் அமைச்சர் வசந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.