3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவது ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் குழந்தைகளின் போசாக்கு நிலை தொடர்பில் பாரிய சிக்கல்கள் ஏற்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமீபகாலமாக ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்னவிடம் கேட்டபோது, சோளத்தில் உள்ள அஃப்ளாடோக்சின் சதவீத பிரச்சினை காரணமாக சிறு பிள்ளைகளுக்காக திரிபோஷா உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment