சம்பள உயர்வு கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

tamilni 186

சம்பள உயர்வு கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

அரச மற்றும் அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

குறித்த போரட்டமானது இன்று(12.12.2023) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20,000 ரூபாய் கொடுப்பனவு உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமது கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூட்டமைப்பின் அழைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version