20 13
இலங்கைசெய்திகள்

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பொது கூட்டம்

Share

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பொது கூட்டம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டமானது (18) பிற்பகல் மூன்று மணிக்கு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் அரசியலில் ஒரு திருப்பு முனையாக தமிழ்த் தேசிய கட்சிகளும் மற்றும் பொது அமைப்புக்களும் சேர்ந்து பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இந்தநிலையில், சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேத்திரனை ஆதரித்தே குறித்த கூட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்களும் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.

இதனடிப்படையில், கூட்டத்தில் கட்சிகளாக அல்லாமல் தமிழ் இனமாக வந்து மக்களை கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை காலை ஒன்பது மணிக்கு தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவதுடன் அதன் பின் ஊடகச் சந்திப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...