எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இடைநடுவில் பொதுமக்கள் எழுந்து சென்றதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் மே தினக் கூட்டம் நேற்றைய தினம்(01) தலவாக்கலை நகரில் நடைபெற்றது.
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைநடுவில் உரையாற்றினார். அவருக்குப்பின் இன்னும் பலர் உரையாற்றக் காத்திருந்தனர்.
எனினும் சஜித் பிரேமதாசவின் உரை முடிந்த கையோடு பொதுமக்கள் கூட்டம் நடைபெற்ற மைதானத்தை விட்டும் எழுந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக அடுத்து உரையாற்ற வந்த கட்சியின் செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் துஷார இந்துனில் , பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
அதனையடுத்து கூட்டத்தின் தொகுப்பாளர் ,கூட்டம் இன்னும் முடியவில்லை, எனவே பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என்று பல தடவைகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தும் வெளியேறpய பொதுமக்களை நிறுத்த முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக சஜித்தின் மே தினக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.